×

6 நாட்கள் கஸ்டடி விசாரணை தீவிரம் தா. பேட்டையில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பு

தா.பேட்டை, பிப் .7: தா.பேட்டை தெருக்களில் அதிகளவு நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள், குழந்தைகள் வெளியில் நடமாட அச்சம் அடைவதோடு வாகனங்களின் குறுக்கே வருவதால் விபத்துகள் நேரிடுகிறது. எனவே நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். தா.பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு தெருக்களில் அதிகளவு நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக உள்ளது என தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தா.பேட்டையை சேர்ந்த கந்தசுப்பிரமணியன் என்பவர் கூறும்போது, தா.பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட தெருக்களில் அதிகளவு தெருநாய்கள் சுற்றி திரிகிறது. இதனால் முதியோர்கள், குழந்தைகள், சிறுவர்கள் வெளியே நடமாடுவதற்கு அச்சம் அடைகின்றனர். பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளை தெருநாய்கள் துரத்துகிறது. நாய்கள் ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டு சாலையில் வரும் இருசக்கர வாகனங்களில் வந்து விழுவதால் விபத்துகள் ஏற்படுகிறது.

சில நாய்கள் நோய் தொற்றுடன் சுற்றித் திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இரவு நேரங்களில் பொதுமக்கள் தெருக்களில் செல்லும்போது தெருவில் சுற்றி திரியும் நாய்கள் குரைத்துக் கொண்டு துரத்துவதால் பெரும் அச்சம் அடைகின்றனர். எனவே வளர்ப்பு நாய்களுக்கு அதற்குரிய அடையாள அட்டையும், கால்நடை மருத்துவமனை மூலம் வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டு சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா? என்பதையும் கண்டறிய வேண்டும். மேலும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை உயிருடன் பேரூராட்சி நிர்வாகம் பிடித்து அப்புறப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள திருச்சி கலெக்டர் உத்தரவிட வேண்டும் என கூறினார்.

Tags :
× RELATED சிக்கன் கடைக்காரரிடம் பணம் பறித்தவர் கைது